ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

புதன், 19 ஆகஸ்ட் 2009 (18:01 IST)
தமிழக இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை சென்னை காமராஜர் அரங்கில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கும் விழா நடைபெறுகிறது. இதேபோன்று, மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்