தி.மு.க கூட்டணி‌யி‌லிருந்து வெளியேற்றினாலும் கவலையில்லை : திருமாவள‌வ‌ன்

வெள்ளி, 6 மார்ச் 2009 (10:09 IST)
‘காங்கிரஸ் நெருக்கடிக்கு பயந்து கூட்டணியில் இருந்து தி.ு.க எங்களை வெளியேற்றினாலும் கவலையில்லை’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ‌ல். திருமாவளவன் கூறினார்.

காஞ்சிபுர‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பேச‌ிய அவ‌ர், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தோல்வியை விட, இலங்கை பிரசசனைதா‌ன் எங்களுக்கு முக்கியம் எ‌ன்றா‌‌ர்.

நாங்கள் தி.ு.க.வுடன்தான் இருக்கிறோம் எ‌ன்று‌ம் காங்கிரசுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

காங்கிரஸ் நெருக்கடிக்கு பயந்து கூட்டணியில் இருந்து தி.ு.க எங்களை வெளியேற்றினாலும் கவலையில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌திருமாவளவ‌ன், இந்த தேர்தலில் தி.ு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்த பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் எ‌ன்றா‌ர்.