கருணா‌நி‌தி உ‌ண்ணா‌விரத அ‌றி‌வி‌ப்பு நாடக‌ம் : ராமதா‌ஸ்

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:36 IST)
''முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம்'' எ‌ன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார் எ‌‌ன்றா‌ர்.

காங்கிரஸ் கட்சியின் 35 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இ‌ந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இலங்கைத் தமிழர்களு‌க்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரு‌‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையின‌ர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்‌தியு‌ள்ளன‌ர். இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் எ‌ன்றா‌ர் ராமதா‌ஸ்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான். ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம். இலங்கைப் பிரசசனையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் எ‌ன்று ராமதாஸ் குற்றம்சா‌ற்‌றினா‌ர்.