பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மேனேஜர் இன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் வேலுச்சாமி (52) என்பவர் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் மதுரை அருகே உள்ள கோதனேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
சென்னை வடபழனி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உடனடியாக வடபழனி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் புஷ்பராஜ் விரைந்து வந்து வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.