இல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வகுறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமஎ‌ன்று ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌ர்மான‌‌த்தை ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்‌தி‌ல்‌ ‌விள‌க்‌கிட த‌மிழக‌ம் முழுவது‌ம் பொது‌க் கூ‌ட்ட‌‌ங்க‌ள், பேர‌ணி நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று தி.மு.க. செ‌ய‌ற்குழு‌வி‌ல் ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தி.மு.க. செயற்குழு கூ‌ட்ட‌ம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமை‌யி‌ல் செ‌ன்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ந‌டைபெ‌ற்றது. பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலர்கள் சற்குணபாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மு‌த்து‌க்குமாரு‌க்கு இர‌ங்க‌ல்

செயற்குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து மாண்ட நிகழ்ச்சிக்கு இந்தச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், தீக்குளித்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாதென்றும், அத்தகைய செயல்களை யாரும் ஊக்கப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறது.

1956ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்களாலும், அவரது தளபதியாக விளங்கிய நாவலர் அமிர்தலிங்கம் அவர்களாலும் பிரகடனப்படுத்தப்பட்டதும், வலியுறுத்தப்பட்டதும், தாய்த் தமிழகம் போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவைத் தேடிப் பெற்றதுமான "தமிழ் ஈழம்'' அமைப்பதற்கான குரல், வலிமை அடைந்து- அந்தக் குறிக்கோளின் வெற்றிக்காக பல போராளிக் குழுக்கள் அமைந்து, அத்தனை போராளிகளும் ஒன்றாக இருந்து சிங்கள அரசை எதிர்த்து சில காலம் - பின்னர் அவை தனித்தனியாகப் பிரிந்து சகோதர யுத்தங்கள் நடத்தி பலவீனப்பட்டது பல காலம் என்ற நிலையில் - இலங்கையில் அமைந்துள்ள சிங்கள அரசு, தனது ராணுவத்தைக் கொண்டு அப்பாவித் தமிழர்களையும் வேட்டையாடுவது கண்டு, அவர்களைப் பாதுகாத்திடவும் - இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு நியாயமான ஜனநாயக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

சுயாட்சியுடன் கூடிய தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்திய நாட்டு மத்திய அரசு முன் வரவேண்டுமென்று- இலங்கையில் போராடிய பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு கலைஞரு‌ம், தி.மு.க.வும், தமிழ்நாட்டின் வேறு பல கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்ததை அனைவரும் அறிவர். அப்போதுதான் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையில் ஒரு சுமூகமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு உரிமைகளும் கிடைத்திட வழி வகுப்பதில் ஆர்வமுடன் இருந்தார் என்பது நினைவு கூர்ந்திடத்தக்கது.

இந்த அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) 1985 ஆம் ஆண்டு கலைஞ‌ர் தலைமையில் உருவாக்கப்பட்டு அந்த அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய், பேராசிரியர் அன்பழகன், திராவிடக் கழகத்தலைவர் கி.வீரமணி, என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், ராமுவாலியா மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவும் அளிக்கப்பட்டது.

ஆயுதம் தாங்கிய யுத்தங்கள் - போர் முழக்கங்கள்

இதற்கிடையே சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, யாரும் எதிர்பாராத வகையில், இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசால் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. துன்ப துயரங்களும், சோகச் சூழல்களும் நிறைந்த, குருதி கொட்டிய அத்தியாயங்களும் இலங்கை வரலாற்றில் புரண்டும் கூட - அங்கே, அந்த நிலத்தில் அமைதி முகிழ்ப்பதற்குத் துளியளவு அடையாளமும் காண முடியாமல் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய யுத்தங்கள் - போர் முழக்கங்கள் - ஒவ்வொரு நாள் நிகழ்வும் வாள் முனை, கத்தி முனை, துப்பாக்கி முனையால் எழுதப்பட்டு - அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதைப் பற்றித் தாய்த் தமிழகத்தில் நம்முடைய குரல் ஒலிக்கின்ற வகையில் இந்திய அரசை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க., அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, உடனடியாக போர் நிறுத்தம் செய்திட - மத்திய அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதுடன் - பல கட்ட அறப் போராட்டங்களின் வழியாக, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியது. பிரமாண்டமான மனிதச் சங்கிலி ஒன்றும் நடத்தப்பட்டது. கண்டனப் பேரணிகள், கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.

டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட முறையீட்டினையொட்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் உறுதி அளித்தார். மேலும் கலைஞர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து அவருடைய ஆதரவையும் கோரிப் பெற்றார். கலைஞரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் அளித்த ரூ.48 கோடி நிதியிலிருந்து உணவுப் பொருட்கள், உடைகள் ஆகிய நிவாரணப் பொருட்களை வாங்கி சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக மத்திய அரசின் அனுமதி பெற்று இலங்கை வாழ் தமிழர்களின் துயர் துடைக்க அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை அரசு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் அறிவித்தது சற்று ஆறுதல்

பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் செல்வதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டதால், சட்டப்பேரவையில் "இறுதி வேண்டுகோள்'' என்ற தலைப்பில் முதலமைச்சரே தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகு, பிரணாப் முகர்ஜி நமக்கு தெரிவித்து விட்டு இலங்கைக்குச் சென்றார். அதைப் பற்றிய அனைத்து விவரங்களையும், பிரணாப் முகர்ஜி நமக்கு அவ்வப் போது தொடர்ந்து கடிதம் வாயிலாக தெரிவித்த வண்ணம் உள்ளார்.

நாம் தொடர்ந்து தொடர்பு கொண்டதன் காரணமாகவும் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றதின் விளைவாகவும் இலங்கையில் போர் நடைபெறுகின்ற இடத்திலே இருந்த அப்பாவி தமிழ் மக்கள் வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏதுவாக 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்று இலங்கை அரசு அறிவித்தது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக வெளிப்பார்வைக்குத் தென்பட்டாலும்- இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்த்திடும் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படாதது மட்டுமல்ல, தொடர்ந்து அங்கே போர் நீடிக்கிறது என்ற செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.

ஆட்சியை சாய்த்து விட சதித்திட்ட‌ம்

ஈழத் தமிழர்களுக்காக இங்கே தமிழ்நாட்டில் குரல் எழுப்பும் சில கட்சியினரும், தமிழகத்தில் அண்ணாவால் அடிக்கல் நாட்டப் பெற்ற தி.மு.க.வின் ஆட்சி, இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே என்ற ஆத்திரம், அசூயை காரணமாக, இலங்கைப் பிரச்சனையை சாக்கிட்டு இதனைக் கவிழ்ப்பதற்கான வன்முறை யுக்திகளைக் கையாண்டு அதன் உச்ச கட்டத்திற்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இலங்கை‌த் தமிழர் நலத்துக்காக 50 ஆண்டு காலமாகப் போராடி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து, அதற்கும் மேலாக தமிழக ஆட்சியையே இரு முறை இழந்து, வீண் பழிச் சொற்களைச் சுமந்து, இப்போது 5-வது முறையாக பொறுப்பேற்று மக்களுக்கான சாதனை சரித்திரத்தையே படைத்து வருகிற ஆட்சியை சாய்த்து விட சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்பதற்குத் தெளிவான உதாரணமாக அண்மையில் இலங்கைப் பிரச்சனைக்காக தீக்குளித்து மாண்ட வாலிபர் முத்துக்குமார் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக் கப்பட்ட குடும்ப நிதி இரண்டு லட்சம் ரூபாயை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டதும், முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தோழர்களோடு சென்ற சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலர் பாபு எம்.எல்.ஏ.வை கல்வீசி தாக்கியும் நடைபெற்ற சம்பவங்கள் போதுமான ஆதாரங்களாகும்.

எனவே இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும்- அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள், மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு- "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப்பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

நிரந்தர அரசியல் தீர்வு உருவா‌க்‌கிட ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, மக்கள் மன்றத்தில் விளக்கி, ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பிரச்சார விளக்கப் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் வருகிற 7ஆ‌ம் தேதி சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்