பால் உற்பத்தியாளர்கள் பிப்ரவரி 23ஆ‌ம் தே‌தி மறியல்

கொள்முதல் விலையை உயர்த்த கோரி பிப்ரவரி 23ஆ‌மதே‌தி சாலை மறியல் செ‌ய்ய பால் உற்பத்தியாளர்கள் நல‌ச்ச‌ங்க‌ம் முடிவு செ‌ய்து‌ள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ‘இப்போது லிட்டருக்கு ரூ.13.50ஆக உள்ள பசும்பாலின் கொள்முதல் விலையை, ரூ.17.50ஆக அதிகரிக்க வேண்டும். ரூ.17ஆக உள்ள எருமைப்பாலின் கொள்முதல் விலையை, ரூ.25ஆக அறிவிக்க வேண்டும். பிரதம சங்க பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்த வேண்டும்’ என்பது உட்ப 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செங்கோட்டுவேல் கூறுகையில், ‘‘இந்த தீர்மானங்களை வலியுறுத்தி பிப்ரவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, கறவை மாடுகளை சாலை‌யி‌ல் கட்டி மறியலில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்