டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பூரண குணமடைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று நேரில் சந்தித்து முதலமைச்சர் கருணாநிதி கொடுத்து அனுப்பிய வாழ்த்து கடிதத்தை வழங்கியதுடன், மலர் கொத்து ஒன்றையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.