கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையடுத்து தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று காலை திடீரென பயங்கர சூறாவளிக் காற்று வீசியதுடன் அலைகள் பயங்கரமாக எழுந்தன.
இதையடுத்து திருவள்ளுவர், விவேகானந்தர் பாறைக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இதைத்தொடர்ந்து உடனடியாக படகு போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்தினர்.
கடற்கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த கட்டு மரங்களை பாதுகாப்பான இடத்திற்கு மீனவர்கள் கொண்டு சென்றனர். காற்று மேலும் தொடர்ந்து வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.