தமிழகத்தில் மேலும் 2 நாள் மழை
வியாழன், 8 ஜனவரி 2009 (16:39 IST)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே சில இடங்களில் இலோசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பூந்தமல்லி, கொரட்டூரில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்ததாக செய்யூர், தாம்பரம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, சென்னை விமான நிலையம், சோழவரம், புதுச்சேரி, காரைக்கால், வலங்கைமான், மயிலாடுதுறை, சீர்காழி, பரங்கிபேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.