வாக்காளர் அல்லாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்

வியாழன், 8 ஜனவரி 2009 (10:03 IST)
மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும் கேட்டுக்கொள்வதோடு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயல‌லிதா வலியுறுத்தி கேட்டுக்கொ‌ண்டு‌‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரு‌ம் 9ஆ‌ம் தேதி (நாளை) திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர் அல்லாதவர்கள் 7ஆ‌ம் தேதி (நேற்று) மாலை தொகுதியை விட்டு வெளியேறவேண்டும் என்பது தேர்தல் விதி. இதன்படி அ.இ.அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் 7ஆ‌ம் தேதி 5 மணிக்கு திருமங்கலம் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஆனால் தேர்தல் விதிமுறையை மீறி தி.மு.க.வை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனியாருக்கு சொந்தமான வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இன்னும் தங்கி இருப்பதாகவும்,வாக்காளர்களை மிரட்டும் வகையில்,தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீதி உலா வந்துகொண்டிருப்பதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன.

எனவே மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும் கேட்டுக்கொள்வதோடு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜெயல‌லிதா வலியுறுத்தி கேட்டுக்கொ‌ண்டு‌‌ள்ளா‌ர்.