மொழி வெறி இருக்க கூடாது- இளங்கோவன்

நமக்கு நம் தாய்மொழி மீது பற்று வேண்டும் ஆனால் வெறி இருக்ககூடாது என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எ‌ன்று கூ‌றினா‌ர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கம்பன் கழக பொன்விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசுகை‌யி‌ல், உலக அளவில் இந்தியா வெகு வேகமாக பொருளாதார துறையில் முன்னேறி வருகிறது.

நாட்டு மக்களுக்கு அவர்கள் தாய்மொழி மீது பற்று இருக்கவேண்டும். இந்த பற்று வெறியாக மாறிவிடக்கூடாது. தமிழை வளர்க்க வேண்டும் என்றால் தமிழில் உள்ள கற்பனை, இலக்கியம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் சிலர் தமிழ்தான் பேசவேண்டும் என்று இயக்கத்தை தொடங்கி தமிழ் வார்த்தைகளை எப்படி பேசவேண்டும் என்று விளம்பரப்படுத்தினர். தமிழை வளர்க்க விழாக்கள் நடத்தி தமிழின் பெருமையை எடுத்து கூறவேண்டும். அதே சமயத்தில் தமிழில்தான் பேசவேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

தமிழர்கள் கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எ‌ன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்