செ‌ன்னை‌யி‌ல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:59 IST)
செ‌ன்னை மா‌நில‌க் க‌ல்லூ‌ரி ‌விடு‌‌தியை உடனடியாக ‌சீரமை‌க்க‌க் கோ‌ரி செ‌ன்னை மா‌நில‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் இ‌ன்று ‌திடீரெ‌ன்று உ‌ள்‌ளிரு‌ப்பு போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தின‌ர்.

செ‌ன்னை ‌திருவ‌ல்ல‌ி‌க்கே‌ணி க‌ஸ்தூ‌ரிபா‌ய் மரு‌த்துவமனை எ‌திரே மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு 160‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ‌ர்க‌ள் த‌ங்‌கி உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌‌யி‌ல் அடிப்படை வசதிகள் சரியில்லை என்பது உள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ாணவர்கள் விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அ‌றி‌ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேசி விடுதியை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது எ‌ன்று‌ம் உடனே சீரமைப்பு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று‌ம் உறுதி அளித்தனர்.

இரு‌ந்தாலு‌ம் மாணவ‌‌ர்க‌ள் தொடர்ந்து போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன‌ர். அவ‌ர்களுட‌ன் பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் பேச்சுவார்த்தை நட‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்