தி.மு.க வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிரசாரம்

சனி, 3 ஜனவரி 2009 (11:30 IST)
திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.ு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள்.

webdunia photoFILE
திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.ு.க வேட்பாளரை லதா அதியமானை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று மதியம் முதல் இரவு வரை பிரசாரம் செய்கிறார்.

அவருடன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் செல்கின்றனர். அவரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நாளையு‌ம், நாளை மறு‌தின‌மு‌ம் பிரசாரம் செய்கிறார்.

webdunia photoFILE
5ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதியுடன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் நாளை பிரசாரம் செய்கிறார்.

தமிழக அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் நவமணி தலைமையில் வணிகர்கள் தி.ு.க வேட்பாளரை ஆதரித்து நாளை முதல் வரு‌ம் 7ஆ‌ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்கள்.