திருமங்கலம் தொகுதியில் சர‌த்குமா‌ர் இன்று முதல் பிரசாரம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (09:47 IST)
திருமங்கலம் தொகுதியில் இன்று முதல் பிரசாரம் செய்யப்போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

webdunia photoFILE
கோவை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், திருமங்கலம் தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்ய உள்ளேன். வரு‌ம் 29ஆ‌ம் தேதி (இன்று) முத‌ல் பிரசாரத்தை தொடங்கி, தேர்தல் முடியும் வரை அந்த தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன் எ‌ன்றா‌‌ர்.

திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக, புதிய சக்தி தேவை என்று மக்கள் விரும்புகிறார்கள் எ‌ன்று கூ‌றிய சர‌த்குமா‌ர், புதிய மாற்றத்தை விரும்பும் மக்களுக்காக, சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது எ‌ன்று‌ம் இருள்சூழ்ந்த தமிழகத்தை ஒளிமயமாக்க சமத்துவ மக்கள் கட்சி பாடுபடுகிறது என்பதை உணர்த்துவதற்காக 'டா‌ர்‌ச்லை‌ட்' சின்னம் கிடைத்து உள்ளது எ‌ன்றா‌ர்.

திராவிடர் கட்சிகளுக்கு மாற்றாக இருப்போம் என்று தே.மு.தி.க.வும் கூறி தனித்து போட்டியிடுவது, அவர்களது விருப்பம். மாற்று சக்தியை உருவாக்க உறுதியுடன் இருப்பதால், நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.