' ஈரோட்டில் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தற்போது கரும்பு வெட்டு நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கரும்புகளை ஆலைகளுக்கு வெட்டதுவங்கியதால் கரும்பு ஏற்றிவரும் லாரிகை தடுத்தும் போராட்டம் நடத்தினர். நேற்று ஈரோடு தபால் அலுவலகம் முன் தங்கள் குடும்பத்துடன் கரும்பு விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை ஈரோடு டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனபால் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். பின் மாலையில் அனைவரும் விடுவித்தனர்.