இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை பாதுகா‌‌க்க நடவடி‌க்கை : பிரதம‌ர் உறு‌திய‌ளி‌த்ததாக வரதராஜ‌ன் தகவ‌ல்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (11:05 IST)
இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பதாகவும், இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்க தொட‌ர்‌ந்து நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌பிரதம‌ர் கூ‌றியதாக மா‌ர்‌க்‌சி‌‌‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னத‌மி‌ழமா‌நிசெயல‌ரஎ‌ன்.வரதராஜ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.மோகன் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இலங்கை‌த் தமிழர் பிரச்சனை குறித்து கடிதம் கொடுத்து, விரிவாக எடுத்துரைத்தனர்.

பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் தாம் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பதாகவும், இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் நிவாரணம் அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.