பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலையை மேலு‌ம் குறை‌க்க வே‌ண்டு‌ம் : சர‌த்குமா‌ர்!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (12:30 IST)
பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்கவும், சமையல் எரிவாயுவின் விலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிற்கு குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து ம‌த்‌திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வ‌லியு‌று‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதுகு‌றி‌த்தஅவ‌ரவெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு அறிவித்திருக்கும் பெட்ரோல், டீசல் விலைகளின் குறைப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் வெறும் கண்துடைப்பு அறிவிப்பாகவே அமைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணையின் தற்போதைய விலை பேரல் ஒன்றுக்கு சுமார் 44 டாலர் அளவிற்கு அதாவது சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை அளவிற்கு குறைந்திருக்கும் நிலையில், கடந்த ஜுன் மாதம் உயர்த்தப்பட்ட அளவில் இருந்து தற்போது விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதுவும் டீசலுக்கு ரூ.3 உயர்த்தியதை 2 ரூபாய் மட்டுமே குறைத்ததோடு, சமையல் எரிவாயுவிற்கு உயர்த்திய 50 ரூபாயை குறைக்கவே இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெட்ரோல், டீசல் விலைகளோடு ஒப்பிட்டும், பணவீக்கம் உள்ளிட்ட பிற காரணிகளை ஒப்பிட்டும் பார்க்கும் போது தற்சமயம் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம், மேலும் டீசலுக்கு ரூ.8-ம் குறைந்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.

விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் விளை பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் லாரிகள் உள்ளிட்ட போக்குவரத்துதுறைகள் பெருமளவு உபயோகப்படுத்தும் டீசலின் விலையை இன்னும் கூடுதலாக குறைத்திருக்க வேண்டும்.

அப்போது தான் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைவதற்கு வாய்ப்பும் இருந்திருக்கும். சமையல் எரிவாயுவை முற்றிலும் கவனத்தில் கொள்ளாமல் அதன் விலை குறைக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து பெட்ரோல், டீசல் இவற்றின் விலைகளை மேலும் குறைக்கவும், சமையல் எரிவாயுவின் விலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிற்கு குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்" எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.