கூடுதல் ‌மி‌ன் கட்டணம் குறை‌ப்பு: ஒழுங்குமுறை ஆணையம்

தொழிற்சாலை, வணிக நிறுவனங்க‌ள் கட்டுப்பாட்டின் அளவிற்கு மேல் பயன்படுத்தும் ‌மி‌ன் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் குறைத்து‌ள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம், தற்போது நிலவும் மின்பற்றாக்குறையின் காரணமாக தொழிற்சாலை, வணிக நிறுவனங்களுக்கு 1.11.2008 முதல் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுப்பாட்டின் அளவிற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின்சார வாரியம் கே.வி.ஏ. ஒன்றுக்கு ரூ.1,500 கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தக் கட்டணத்தை ரூ.900 என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறைத்துள்ளது.

உயர்அழுத்த தொழில் நுகர்வோர்களுக்கு ூனிட் ஒன்றுக்கு ரூ.14 மிகைக் கட்டணமாக விதிக்க உத்தேசித்துள்ளதையும் ரூ.10.50 ஆக குறைத்து உத்தரவிட்டுள்ளது. உயர் அழுத்த வணிக நுகர்வோரை ூனிட் ஒன்றுக்கு ரூ.20 என்ற வீதத்தில் மிகைக் கட்டணத்தை விதிக்க உத்தேசித்துள்ளதை ரூ.15 ஆகவும் ஆணையம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

தாழ்வழுத்த தொழில் நுகர்வோர்களுக்கு மிகைக் கட்டணத்தை ூனிட் ஒன்றுக்கு ரூ.18.80 என்று விதிப்பதாக உத்தேசித்துள்ளதை ரூ.14.10 என்று குறைத்தும், அதுபோல ூனிட் ஒன்றுக்கு ரூ.23.20 விதிப்பது என்று உத்தேசித்த தொகையை ரூ.17.40 என குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை 1.11.2008 முதல் அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மிகைக் கட்டணங்கள் இன்றுமுதல் தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்