ஓ‌ய்வூ‌தியதா‌ர‌ர்களு‌க்கு அக‌விலை‌ப்படி உய‌ர்வு - த‌‌மிழக அரசு!

சனி, 22 நவம்பர் 2008 (05:45 IST)
ஓய்வூதியதாரர்க‌ள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 47 ‌விழு‌க்காடு அக‌விலை‌ப்படி உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் :

ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2008 முதல் ஓய்வூதியம் மற்றும் அகவிலை ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும் அகவிலை குடும்ப ஓய்வூதியத்தில் 47 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்தியவர்கள், ஓய்வூதியம் அல்லாத பணியாளர் அமைப்பைச் சேர்ந்த இறந்த பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 1.1.2008 முதல் அடிப்படை கருணைத்தொகை மற்றும் அகவிலை கருணைததொகையில் 39 ‌விழு‌‌க்காடு அகவிலைப்படி வழங்கப்படும்.

மேலும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2008 முதல் கூடுதல் தவணையாக 7 ‌விழு‌க்காடு அகவிலைப்படி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2008 முதல் 54 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும்.

இதேபோல், மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்தியவர்கள், ஓய்வூதியம் அல்லாத பணியாளர் அமைப்பைச் சேர்ந்த இறந்த பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 1.7.2008 முதல் அடிப்படை கருணைத்தொகை மற்றும் அகவிலை கருணைத்தொகையில் 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் முதலியவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை திரும்பப் பெறும் தகுதியுள்ள, திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் திரும்பப் பெறும் திரும்பப் பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு ஊழியர்களின் முழு ஓய்வூதியத்தொகைக்கு முழு ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி ஓய்வூதியத்தில் 54 சதவீத அகவிலைப்படியை 1.7.2008 முதல் பெறத் தகுதியுடையவராவர்.

அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்க அரசு முடிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கான அரசின் உத்தரவு, அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஓய்வூதியதார்கள், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் இதர ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்துமஎ‌ன்று த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்பு தெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்