தாராபுரம், காங்கயம் வாக்காளர் வரைவு பட்டியல்!

புதன், 12 நவம்பர் 2008 (12:22 IST)
தாராபுரம் மற்றும் காங்கேயம் தொகுதியின் ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

தாராபுரம் கோட்டாட்சியர் நாராயணன் அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 98 வாக்காளர்கள் உள்ளதாகவும், இவர்களில் ஆண்கள் 93 ஆயிரத்து 928 பேர், பெண்கள் 93 ஆயிரத்து 168 பேர் என்றும் தெரிவித்தார்.

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 217 வாக்குகள் உள்ளதாகக் கூறிய அவர், இதில் ஆண்கள் 87 ஆயிரத்து 456 பேரும், பெண்கள் 85 ஆயிரத்து 761 பேரும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

வாக்காளர் வரைவு பட்டியல் வரும் 25ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொகுதி மாற்றம், திருத்தம் ஆகியவற்றிற்கு உரிய விண்ணப்பத்தை வாங்கி புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் கொடுக்கலாம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்