தமிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌க்கு 24 மணி நேர மழை எச்சரிக்கை!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:03 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக‌மமற்றும் புதுச்சேரியிலப‌ல்வேறு இடங்களில் மழை பெய்யும் எ‌ன்று‌மஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது இலங்கை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது எ‌‌ன்று‌ம் இதன்காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுட‌ன் அவ்வப்போது மழை பெய்யும் எனவு‌ம், ஓரிரு முறை கனமழை பெய்யும் எனவு‌ம் தென்தமிழக‌த்தைவிட வடதமிழக‌த்‌தி‌ல் அதிகளவு மழை பெய்யும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்