சென்னை செ‌ன்‌டிர‌லி‌ல் இரு‌ந்து நாகர்கோ‌யிலுக்கு சிறப்பு ரயில்!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (10:39 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்ட நெ‌‌‌ரிசலை சமா‌ளி‌க்க சென்னை ச‌ெ‌ன்டிர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இருந்து நாகர்கோவிலுக்கு 24, 26ஆ‌ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வரு‌ம் 24, 26ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (வ.எண். 0631) செ‌ன்னை சென்டிர‌‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நாகர்கோ‌யி‌ல் சென்றடையும்.

மறுமார்க்கம், நாகர்கோ‌யிலில் இருந்து சென்னைக்கு 25, 27ஆ‌ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (0632) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்தை வந்தடையும்.

இ‌ச்சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, ‌திருநெ‌ல்வே‌லி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

நாகர்கோவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில்க‌ள் பெரம்பூரில் கூடுதலாக நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) காலை தொடங்குகிறது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்