ரூ.50க்கு 10 ம‌ளிகை‌ப் பொரு‌ள் தி‌ட்ட‌ம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்!

வியாழன், 2 அக்டோபர் 2008 (17:52 IST)
நியாய‌விலக‌டைக‌ளி‌ல் 50 ரூபா‌ய்‌க்கு 10 ம‌ளிகை‌பபொரு‌ட்க‌ளவழ‌ங்கு‌‌ம் ‌தி‌ட்ட‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அன்றாடம் சமையலுக்குத் தேவைப்படும் 10 ம‌ளிகை‌பபொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கும் புதிய திட்டம் அக்டோபர் 2ஆ‌மதேதி காந்தியடிகள் பிறந்த தினத்தன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இன்று ரூ.50க்கு மானிய விலையில் மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்ட தொடக்க விழா தலைமை செயலகத்தில் நடந்தது.

விழாவுக்கு உணவு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார்.

காலை 9 மணி‌க்கஇந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 10 பேருக்கு மளிகைப் பொருட்கள் அட‌ங்‌கிபையை வழங்கினார்.

50 ரூபாய்க்கு மானிய விலையில் கிடைக்கும் மளிகை பொருட்கள்:

250 கிராம் மிளகாய்த்தூள் (ரூ.14)

50 கிராம் மஞ்சள் தூள் (ரூ.2)

250 கிராம் மல்லித்தூள் (ரூ.18)

75 கிராம் கடலைப்பருப்பு ரூ.2)

25 கிராம் வெந்தயம் (ரூ.1)

25 கிராம் கடுகு (ரூ.1)

25 கிராம் சோம்பு (ரூ.1.50)

25 கிராம் மிளகு (ரூ.3)

50 கிராம் சீரகம் (ரூ.5.50

10 கிராம் பட்டை/இலவங்கம் (ரூ.2)

வெப்துனியாவைப் படிக்கவும்