வடமாநிலங்களில் மழை: 8 ரயில்கள் ரத்து!
புதன், 17 செப்டம்பர் 2008 (17:13 IST)
வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூர் எஸ்வந்த்பூர்- முகாபர்பூர் (சென்னை வழி) வாராந்திர விரைவு ரயில், கவுகாத்தி- சென்னை எழும்பூர் வாராந்திர ரயில், சென்னை எழும்பூர்- திப்ருகர் டவுன் வாராந்திர விரைவு ரயில்.
பாட்னா- எர்ணாகுளம் (சென்னை வழி) வாரம் இருமுறை செல்லும் விரைவு ரயில் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.
அவுரா- எஸ்வந்த்பூர் (சென்னை- காட்பாடி வழி) விரைவு ரயில் காரக்பூர், ஜர்சுகுடா, சம்பல்பூர், தித்லகார், விஜயநகரம், விசாகப்பட்டினம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.