ம.தி.மு.க. மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:10 IST)
சென்னை: மதுரை‌யி‌ல் நடைபெறு‌ம் ம.‌தி.மு.க. மாநா‌ட்டு‌க்கு வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து அ‌க்‌‌க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கடித‌ம் அனு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

அ‌ந்த கடித‌த்த‌ி‌ல், ''மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா - மதுரை மண்டல மாநாடு'' நடைபெறுவது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பேரறிஞர் அண்ணா ஒரு சாமான்ய குடும்பத்தில் பிறந்து, சரித்திரத்தின் பக்கங்களில் நிலையான இடத்தைப் பிடித்து, ஏழை எளியோர்களும் யமுனை நதிக்கரையின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கின்ற நாடாளுமன்றத்தின் அத்தாணி மண்டபத்தில் கோலோச்சலாம், சட்ட மன்ற உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் பவனி வரலாம் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

அனைவருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்துவிட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் இத்தருணத்தில், எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைப்பகிர்ந்து கொள்கிறேன்.

பெரியாரின் லட்சியப்பாதையில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைச் சாலையில் தடம் புரளாமல் நடைபோட்டு வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு சிறக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்