ஈரோடு மாவட்டத்தில் 14,000 போலி குடும்ப அட்டைகள்: வருவாய் அதிகாரி தகவல்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:18 IST)
ஈரோடு மாவட்டத்தில் 14,000 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 100 ‌விழு‌க்காடு தணிக்கை செய்யப்பட்டது. இதன்மூலம் 38,637 குடும்ப அட்டைகள் ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர். இதில் 14,000 போலி குடும்ப அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எ‌ன்று மனோகரன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்