தமிழகத்தில் 3 கூடுதல் டி.ஜி.பி.க்கள் காவ‌ல் துறை தலைமை இய‌க்குன‌‌ர்களாக பத‌வி உய‌ர்வு!

புதன், 10 செப்டம்பர் 2008 (12:47 IST)
தமிழகத்தில் ஆர்.நடராஜ், கே.விஜயகுமார், ஜெகன் எம்.சேஷாத்ரி ஆகிய 3 கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ர்க‌ள்(ஏ.டி.ஜி.பி.), காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர்களாக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்று‌ள்ளன‌ர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்து‌ள்ள உத்தர‌வி‌ல், சென்னை சிறைத்துறை இயக்குனரான, கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ர் (ஏ.டி.ஜி.பி.) ஆர்.நடராஜ், காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக பணிபுரிவார்.

சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ரான (ஏ.டி.ஜி.பி.) கே.விஜயகுமார், காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் காவ‌லதுறபயிற்சி தலைமை இய‌க்குன‌ராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ரான (ஏ.டி.ஜி.பி.) ஜெகன் எம்.சேஷாத்ரி, காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஊர்காவல் படை கமாண்டண்ட் ஜெனரலாக பொறுப்பு ஏற்பார்.

டெல்லியில் மத்திய உளவுப்பிரிவின் கூடுதல் இயக்குனராக உள்ள கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ர் (ஏ.டி.ஜி.பி.) கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்று, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்.

சென்னை வடக்கு மண்டல காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் (ஐ.ஜி.) கே.ராதாகிருஷ்ணன், கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக (ஏ.டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் காவ‌லதுறதலைமஇய‌க்குன‌‌ராக பொறுப்பு ஏற்பார்.

காவ‌ல்துறை பயிற்சி ஐ.ஜி.யாக உ‌ள்ள டி.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. விபாகர் சர்மா மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவ‌ல்துறை வீட்டு வசதிக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இவர் பதவி ஏற்பார் எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்