இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சாரம் வராத நேரத்தை அறிவிப்பதற்கு பதிலாக அரசு மின்சாரம் உறுதியாக வரும் நேரத்தை அறிவிக்கலாம் என்கின்ற அளவு நிலைமை மோசமாகி உள்ளது.
இந்த மின் தடையால் தொழிற்சாலைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இயலாமையை கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை ராஜினாமா செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி இதுகுறித்து மக்களது கவனத்தை ஈர்க்கின்ற வகையில் 10 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன் இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.