விழுப்புரம் : தொடர் மின்வெட்டினால் தி.மு.க இனி ஜார்ஜ் கோட்டை பக்கமே தலைகாட்ட முடியாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறினார்.
webdunia photo
FILE
விழுப்புரம் மாவட்ட ம.தி.மு.க தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொது செயலர் வைகோ பேசுகையில், 14 வருடங்களாக அண்ணாவின் கொள்கை தீபத்தை ஏந்தி பிடித்து கொண்டிருக்கிறோம்.
நம்மிடம் பணம் இல்லை, தொடர்பு சாதனங்கள் இல்லை, ஆனால் தொண்டர்களின் உறுதியும், தியாகங்களும் இயக்கத்தை கட்டிக் காக்கிறது. ம.தி.மு.க.தான் உண்மையான தி.மு.க என்று உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.
உலக பொய்யர்களின் முதல் சீடர் ஆற்காடு வீராசாமி. மின் தட்டுப்பாடு குறித்து ம.தி.மு.க போராட்டம் நடத்திய போது அப்படி எல்லாம் இல்லை என்றார். கரண்டால் இந்த அரசு காணாமல் போகப்போகிறது. ஜார்ஜ் கோட்டை பக்கமே இனி தலைகாட்ட முடியாது என்று வைகோ தெரிவித்தார்.