செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.80 கோடி மத‌ி‌ப்பு‌ள்ள போதை பொரு‌ள் ப‌றிமுத‌ல்!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (12:55 IST)
செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து தா‌ய்லா‌ந்‌தி‌ற்கு போதை பொரு‌ள் கட‌த்த முய‌ன்ற பெ‌ண்ணை சு‌ங்க‌த்துறை‌யின‌ர் கைது செ‌ய்து அவ‌ரிட‌ம் இரு‌ந்து ரூ.2.80 கோடி ம‌‌தி‌ப்பு‌ள்ள ஹெரா‌யினை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

செ‌ன்னை ‌மீன‌ம்பா‌க்க‌‌ம் அ‌ண்ணா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌‌ல் இரு‌‌ந்து தா‌ய்லா‌ந்து செ‌‌ல்வத‌ற்காக புவா‌ங் (40) எ‌ன்ற பெ‌ண் இ‌ன்று அ‌திகாலை 2.30 ம‌ணி‌க்கு ‌விமான ‌நிலைய‌ம் வ‌ந்தா‌ர்.

அ‌ப்போது அவருடைய உடைமைகளை சு‌ங்க‌த்துறை அ‌திகா‌ரிக‌‌ள் சோதனை செ‌ய்தன‌ர். இ‌‌தி‌ல் மூ‌ன்று பொட்டல‌ங்க‌ளி‌ல் ஹெரா‌யி‌ன் பது‌ங்‌கி வை‌த்‌திரு‌ந்ததை சு‌ங்க‌த்துறை‌யின‌ர் க‌ண்‌டுபிடி‌த்தன‌ர்.

2.8 ‌கிலோ கொ‌ண்ட இ‌ந்த ஹெரா‌யி‌ன் ம‌தி‌ப்பு ரூ.2.80 கோடியாகு‌ம். இதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ந்த பெ‌ண்ணை சு‌‌ங்க‌த்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்