அணுசக்தி ஒப்பந்த‌த்தை எதிர்ப்பது ஏன்?: இடதுசா‌ரிகளு‌க்கு ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கே‌ள்‌வி!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (10:39 IST)
அணு ச‌க்‌தி ஒப்பந்தத்தை இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிக‌ள் எதிர்ப்பது ஏ‌ன் எ‌ன்று த‌மிழக ‌மி‌ன்சார‌த் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாளை முன்னிட்டு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இ‌ந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகை‌யி‌ல், "நீரில் மின்சாரம் தயா‌ரி‌க்கலா‌ம் என்றால் மழை பிரச்னை. எ‌ன்பதா‌ல்தா‌ன் அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதை, பா.ஜ.க. தலைவர் அத்வானி எதிர்க்கிறார். ஆனால், அவர் பிரதமரானால் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறவில்லை.

இப்படி முரண்பட்ட அத்வானியோடு இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள் கூட்டணி சேர்ந்து ‌பிரதம‌ர் மன்மோகன் ‌சி‌ங் அரசை கவிழ்க்கச் சதி செய்தது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வல்லரசாக இந்தியா உருவாகும்.

இதை சீனா விரும்பவில்லை எ‌ன்பதா‌ல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை சீனாவுடன் கை‌‌க்கோ‌ர்‌த்து‌க் கொ‌ண்டு இடதுசாரிகள் மறைமுகமாகச் சதி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.

ரஷியாவுடன் கூடங்குளம் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டுமானங்கள் முடிந்து இயந்திரங்கள் எல்லாம் வ‌ந்து‌வி‌ட்டது. இ‌த‌ற்கான ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் போட்ட போது, அதை எதி‌ர்க்காத இடதுசாரிகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதை எதிர்க்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்" எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்