மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை கவுரவப்படுத்தும் வகையில் ம.தி.மு.க. மண்டல மாநாடு மதுரையில் செப்டம்பர் 15ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இன்று ஒரு முக்கியமான நாள் ஆகும். மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உள்ளது. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா என்ற `திரில்' நிலவி வருகிறது.
எப்படியாவது ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டு வருகிறார். குதிரை பேரம் நடந்து வருகிறது. இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் மத்திய அரசு தோல்வியை தழுவும் என்பது தான் என்னுடைய யூகம். நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றாலும் நவம்பர் மாதம் மக்களவைக்கு தேர்தல் வரும்'' என்று வைகோ கூறினார்.