செம்மொழி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நிதி: கருணாநி‌தி வழங்கினார்!

திங்கள், 21 ஜூலை 2008 (15:05 IST)
செ‌ம்மொ‌ழி த‌மி‌ழ் ஆ‌ய்வு ‌நிறுவன‌த்து‌க்கு தனது சொ‌ந்த பண‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ரூ.1 கோடி ‌நி‌தியை இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத்தை க‌ட‌ந்த ஜூ‌ன் 6ஆ‌ம் தே‌தி திறந்து வைத்த முதலமைச்சர் கருணாநிதி, தனது சொந்தப்பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை இந்த நிறுவனத்தின் பொறுப்பில், `கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றினை நிறுவிட வழங்குகின்றேன்.

இந்த ஒருகோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் அறக்கட்டளையின் பெயரால் டெபாசிட் செய்யப்பட்டு, ஆண்டுதோறும் அந்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மையத்தில் சிறப்பாகத் தமிழக வரலாற்றுப் பயன்மிக்ககல் வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகள் வழங்கப்படும்'' என்று அறிவி‌த்தா‌ர்.

அந்த அறிவி‌ப்பை தொட‌ர்‌ந்து, தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் மருதநாயகத்திடம் முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார் எ‌ன்று த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்