திருச்சியில் தண்டவாளத்தில் விரிசல்!

திங்கள், 21 ஜூலை 2008 (13:15 IST)
திருச்சி ர‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கு‌ம், பொன்மலை உள்ள ரயில் நிலைய‌‌த்து‌ம் இடையே நேற்றிரவு தண்டவாள‌த்‌தி‌ல் ‌வி‌ரிச‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இதனை ர‌யி‌ல்வே ஊ‌ழிய‌ர்க‌ள் உடனடியாக க‌ண்டு‌பிடி‌த்ததா‌ல் ‌விப‌த்து த‌‌வி‌‌ர்‌க்க‌ப்‌ப‌ட்டது.

நே‌‌ற்று ‌ந‌ள்‌ளிரவு தகவ‌ல் வ‌ந்ததை தொட‌ர்‌ந்து உடனடியாக ‌ர‌யி‌ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது எ‌ன்று ர‌யி‌ல்வே தர‌ப்‌பி‌ல் தெ‌ரி‌‌‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

த‌ண்டவாள‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌வி‌ரிசலா‌‌ல் சென்னை- செங்கோட்டை செல்லும் பொதிகை ‌விரைவு ர‌ெ‌யி‌ல் 71 ‌நி‌மிடமு‌ம், செ‌ன்னை- நெ‌ல்லை ‌விரைவு ரெ‌யி‌ல் 68 ‌நி‌மிடமு‌ம் தாமதமாக ‌‌திரு‌ச்‌சி ரெ‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கு வ‌ந்தது.

இதேபோ‌ல் சென்னை-மதுரை பாண்டியன் ‌விரைவு ரயி‌ல் 62 ‌நி‌மி‌ட‌ம் ஸ்ரீர‌‌‌ங்க‌ம் ரெ‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லு‌ம், ‌‌திருவன‌ந்தபுர‌ம்- செ‌ன்னை ‌விரைவு ர‌யி‌ல் 52 ‌நி‌மிட‌ம் பொ‌ன்மலை ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌திலு‌ம், ராமே‌ஸ்வர‌ம்- செ‌ன்னை ‌விரைவு ர‌யி‌ல் 65 ‌நி‌மிட‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌‌ட்டிரு‌ந்தது.

இ‌ன்று அ‌திகாலை 4 ம‌ணி‌க்கு த‌ண்டவாள‌‌‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌வி‌ரிச‌ல் ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டு போ‌க்குவர‌த்து தொட‌‌ங்‌கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்