ராமேஸ்வரத்தில் 27ஆ‌ம் தே‌தி வைகோ உண்ணாவிரதம்!

வியாழன், 17 ஜூலை 2008 (10:09 IST)
‌''சி‌ங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து வரு‌ம் 27ஆ‌ம் தேதி ராமேஸ்வரத்தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூறியு‌ள்ளா‌ர

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''‌சி‌றில‌ங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையிலேயே வந்து சிங்கள கடற்படையினர் குருவிகளை சுடுவது போல் தமிழக மீனவர்களை சுடுவதும், மீன்பிடி வலைகளை நாசப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதால் தான் சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்துகின்றனர். ‌சி‌றில‌ங்கா கடற்படையினருக்கு நீர் மூழ்கி பயிற்சியும் இந்தியா தருவது தமிழக மீனவர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

மத்திய அரசை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்ட வேண்டும் என்று முன்பே கூறியிருந்தேன். அதன் ஒருகட்டமாக, தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் ‌சி‌றில‌‌ங்கா கடற்படையை தடுக்கும் கடமையை செய்யாததுடன், சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து 27ஆ‌ம் தேதி ராமேஸ்வரத்தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்'' எ‌ன்று வைகோ கூறியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்