குரு கைது ஏ‌ன்? கருணாநிதி ‌விள‌க்க‌ம்!

வெள்ளி, 11 ஜூலை 2008 (15:36 IST)
வ‌‌ன்‌னிய‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் காடுவெ‌ட்டி குரு தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கீ‌ழ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதை கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கே‌ள்‌வி-ப‌‌தி‌ல் அ‌றி‌க்கை:

"குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்துள்ளார்? அவர் எந்த வழிகளில் ஊறு விளைவித்தார்'' என்று பா.ம.க. தலைமை கேட்கிறதே?

பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தக்கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனைப்படிக்கும் பொது மக்களுக்கும், அவருக்கும் நினைவூட்டுகிற வகையில் குரு பேசிய பேச்சின் சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒருமுறை தெரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இதைப்படித்து பார்த்து விட்டு, குரு மீதான நடவடிக்கை சரியா? தவறா என்பதை நடுநிலையாளர் தெரிந்து கொள்ளட்டும் எ‌ன்று‌ம் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன், பா.ம.க.விற்கும், தி.மு.க.விற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த செய்த முயற்சி என்ன வாயிற்று?

திருமாவளவன் என்னைச் சந்தித்த போது இந்த பிரச்சினை குறித்து சமாதானம் பேசினார். ஆனால் பா.ம.க. பொதுக் குழுவில் குரு பேசியதை கண்டித்து கூட ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க முடியும்?

குரு மீது புகார் மனு கொடுத்தவர்களே அதனை இல்லை என்றும் அப்படி புகார் செய்ய வில்லை என்றும் சொல்வதாக பா.ம.க. தலைவர் சொல்கிறாரே?

புகார் கொடுத்தவர் ஒரு நீதிபதியின் முன்னாலேயே அந்தப் புகாரைப்பதிவு செய்திருக்கிறார் என்று காவல் துறை கூறுகிறது. தற்போது அந்தப் புகாரை மறைந்து விட்டு மிரட்டலுக்கு அஞ்சி தான் புகாரே கூற வில்லை என்கிறார் என்பது தான் உண்மை என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஒன்றை இப்போது தொடங்குகிறீர்களே முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கிய போது நீங்கள் அதை ஆதரிக்க வில்லையே ஏன்?

மாநில அரசு இது போல கேபிள் டி.வி. நிறுவனம் ஒன்றை தொடங்கிட வேண்டுமானால், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும், அப்படி அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று ஜெயலலிதா ஆட்சியில் மாநில அரசே முழுமையாக கேபிள் டி.வி. நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்ததால், அதை ஆதரிக்க முடியவில்லை. நாம் கருதியபடியே அப்பொழுது மாநில அரசால் அந்த கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படவில்லை.

ஜெயலலிதா தொடங்குவதாக அறிவித்த கேபிள் டி.வி.க்கும் இப்போது அரசு தொடங்கியுள்ள கேபிள் டி.வி.க்கும் என்ன வித்தியாசம்?

அன்று ஜெயலலிதா தொடங்குவதாக இருந்தது அனைத்து டி.வி. கம்பி வடங்களும் அரசுக்கே சொந்தம் மற்ற கேபிள் டி.வி. நிறுவனங்கள் அந்த தொழிலில் ஈடுபட முடியாத அளவுக்கு அமைந்திருந்தது என்ற நிலையில் தொடங்கப்பட்டது. இப்பொழுது அரசு கேபிள் டி.வி. தொடங்கினாலும் மற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து கேபிள் இணைப்பு சேவைகளை வழங்கி வரலாம். தற்போது தொடங்கப்படும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுவில் இயங்கக் கூடிய நிறுவனமாகும். அரசுக்கே ஏகபோகம் அல்ல.

உளியின் ஓசைக்குப் பிறகு கருணாநிதியின் "பொன்னர் சங்கர்'' கதையும் திரைப்படமாக வர இருக்கிறது. இந்த செய்திப்படி கருணாநிதிக்கு மற்றொரு நாட்டுப்பணி காத்திருக்கிறது என்று ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறாரே?

என்ன செய்வது? "கூந்தல் உள்ள பெண்மணி அள்ளி முடிகிறாள்'' என்பது பழமொழி எ‌‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்