சோனியா காந்தி முடிவை ஏற்கிறேன்: எம்.கிருஷ்ணசாமி!

செவ்வாய், 8 ஜூலை 2008 (09:39 IST)
த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து மா‌ற்ற‌ப்‌‌ப‌ட்டு‌ள்ள எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி, ''சோனியா காந்தியின் முடிவை முழு மனதோடு ஏற்கிறேன்'' என்று கூறியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக கே.வி.தங்கபாலுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. சோனியாகாந்தி முடிவு எதுவானாலும் அதை நான் முழு மனநிறைவோடு ஏற்று எந்த நிலையிலும் எனது காங்கிரஸ் பணியை தொடர்வேன்.

நான் தலைவராக பணியாற்றிய கடந்த இரண்டரை ஆண்டுகாலம் எனது காங்கிரஸ் வளர்ச்சி பணிக்கு தங்கபாலு மிகவும் ஒத்துழைப்பு தந்தார். அதே உணர்வோடு இன்றைக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்தை தெரிவிப்பதோடு, அவரது கட்சி பணிக்கு எனது ஒத்துழைப்பு, உறுதுணையும் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

அதோடு, எனது கட்சி பணிக்கு மிகவும் உற்ற உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்