மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: செங்கோடன்!

புதன், 2 ஜூலை 2008 (12:20 IST)
லா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ ‌பிர‌ச்சனையை ‌சுமுகமாக ‌தீ‌ர்‌க்க ம‌த்‌திய அரசு உடனடியாக பே‌ச்சுவா‌ர்‌த்தை ந‌ட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் ச‌ம்மேளன தலைவ‌ர் செ‌ங்கோட‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

நாம‌க்‌க‌ல்‌லி‌ல் இ‌ன்று லா‌ரி உ‌ரிமையளா‌ர்க‌ள் ச‌‌ம்மேளன தலைவ‌ர் செ‌ங்கோட‌ன் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், நேற்று நள்ளிரவு முதல் தொட‌ங்‌கியு‌ள்ள லாரிகள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நட‌ந்து வரு‌கிறது.

வேலை ‌‌நிறு‌த்த‌த்தா‌ல் சரக்கு போக்குவரத்து தேங்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து அய‌ல் மாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. அதுபோல் அய‌ல் மாநில‌ங்க‌ளி‌ல் இருந்து‌ம் லாரிகள் வரவில்லை. பொருட்கள் நிறைய தேங்குவதால் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்‌தி ‌பிர‌ச்சனை‌க்கு சுமுக த‌ீ‌ர்வு காண வேண்டும் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர் செ‌ங்கோட‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்