தலித் கிறிஸ்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு: திருமாவளவன்!
சனி, 28 ஜூன் 2008 (10:13 IST)
''சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற தலித் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், பெரும்பான்மையான தலித் மக்கள் கிறிஸ்தவத்தில் உள்ளனர். அங்கு அவர்களுக்கு சாதியக் கொடுமை உள்ளது. அவர்களின் பிரச்னை தீரும்வரை நாங்கள் போராடுவோம்.
சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.