2008-2009ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணி மாறுதல் சார்பான கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை நடக்கிறது.
ஜூன் 27ஆம் தேதி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஜூன் 30ஆம் தேதி முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாகாண மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 1ஆம் தேதி ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஜூலை 3ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.
ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (தமிழ்) சென்னை எழும்பூரில் உள்ள மாகாண மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.