விபத்தில் கவிழ்ந்த காரை அகற்றியவர்கள் மீது அந்தவழியே வந்த மற்றொரு கார் மோதியதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மாருதி கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாடு இழந்து மேம்பால தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடந்த காரை காவல்துறையினர் அகற்றி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
அப்போது, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் கட்டுப்பாடு இழந்து கூட்டத்தினுள் புகுந்ததில், மேம்பாலத்தில் இருந்து 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஹரீஷ், பாஸ்கர், சசிகுமார், சந்திர சேகர், சிலம்பரசு ஆகியோர் நிகழ்விடத்திலேயே இடத்திலேயே இறந்தனர்.