பெண்கள் கல்லூரிகளுக்கு முன் 'ஈவ்-டீசிங்' எச்சரிக்கை பலகை!

திங்கள், 23 ஜூன் 2008 (12:11 IST)
பெண்களை ஈவ்-டீசிங் செய்வதைத் தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்புகளை மாநகர காவ‌ல்துறை‌யின‌ர் வெளியிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள், பேரு‌ந்து நிலையங்கள் உள்பட பொது இடங்களில் மாணவிகளிடம் ஈவ்-டீசிங் செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க காவ‌ல்துறை‌யினரு‌க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகள், பொது இடங்களில் "ஈவ்-டீசிங்' செய்வதைத் தடுக்கும் வகையில், காவ‌ல்துறை‌யின‌ர் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை நிறுவி வருகின்றனர். பல்வேறு இடங்களில் காவல்துறை வெளியிட்டுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியின் வாசலுக்கு முன்பு இதுகுறித்து எச்சரிக்கை பலகைககளை காவ‌ல்துறை‌யின‌ர் ை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கை பலகை‌யி‌ல், 'உஷார்' என்ற தலைப்பில் ஈவ்-டீசிங் செய்யும் குற்றங்களில் ஈடுபட்டால் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமாக விதிக்கப்படும்.

ஈவ்-டீசிங் கும்பல் குறித்து மாணவிகள் வேப்பேரி காவல்நிலையத்துக்கு 23452620 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444053987, 9791192481, 9444133707 என்ற செல்போன் எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகர காவ‌ல்துறை அறிவித்துள்ளது.

இதேபோல, மெரீனா கடற்கரை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அந்தந்த காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதவிர காவ‌ல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், ஹெல்ப்லைன் சேவைக்கும், ரோந்து வாகனங்களில் செல்லும் காவல‌ர்க‌ளிடமும் ஈவ்-டீசிங் குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்