தமிழகத்தில் கூடுதலாக 25 லட்சம் செல்போன் இணைப்பு : பொதுமேலாளர் தகவல்!

சனி, 21 ஜூன் 2008 (13:53 IST)
தமிழகத்தில் கூடுதலாக 25 லட்சம் செல்போன் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் வி.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் சென்னையை தவிர மொத்தம் 28 லட்சம் செல்போன் இணைப்புகள் உள்ளது. தற்போதும் மேலும் 25 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் செல்போன் இணைப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். செல்போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதலாக அனைத்து பகுதிகளிலும் செல்போன் கோபுரங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டதில் 129 செல்போன் கோபுரங்கள் உள்ளது. மேலும் 82 கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்