தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த பா.ம.க. வழக்கறிஞர்கள் பாலு (கூடுதல் அரசு பிளீடர்), எம்.ஆர்.ஜோதி மணியன், கதிர்வேல், கோபிராஜ், கோபு ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அரசு தலைமை பிளீடர் ராஜா கலிபுல்லாவிடம் கொடுத்தனர்.