மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் மணி மண்டபத்தில் உள்ள படத்துக்கு அ.இ.ம.க. தலைவர் சரத்குமார் இன்று மாலை அணிவித்தார். பின்னர் மணிமண்டபத்துக்கு வெளியே கட்சி கொடியை ஏற்றி வைத்து அவர் பேசுகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை வெளியேற்றியது கூட்டணி தர்மத்தை மீறிய செயலாகும்.
இது தொடர்பாக இன்று இரவு புதுக்கோட்டையில் நடைபெறும் எங்களது கட்சி பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்கிறேன். கக்கனின் மணிமண்டபம் விரிவாக்க பணி தொடங்கியதும் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்குவேன் என்று சரத்குமார் கூறினார்.