தமிழகத்தில் 20,000 டெ‌ட்டனேட்டர்கள் பறிமுதல்!

செவ்வாய், 17 ஜூன் 2008 (14:58 IST)
நாம‌க்க‌ல் ம‌ற்று‌ம் அதை‌ச்சு‌ற்‌றியு‌‌ள்ள பகு‌திக‌ளி‌ல் குண்டுகளை வெடிக்கச் செய்யும் 20,000 டெ‌ட்டனேட்டர்களை கைப்பற்றியு‌ள்ள காவல் துறையினர், இது தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளனர்.

திருச்சி அரு‌கிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நபரிடமிருந்து 2,000 டெ‌ட்டனேட்டர்களைக் கைப்பற்றிய காவல‌ர்க‌ள், அவர் கொடுத்த துப்பின் அடிப்படையில் அருகில் உள்ள கிராமங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கு வீடுகளிலிருந்தும், மறைவிடங்களி‌ல் இருந்தும் 18,000 டெ‌ட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இது தொட‌ர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே மாதம் 24 ஆம் தேதி புன்னஞ்சத்திரம் என்ற இடத்தில் உள்ள சிவகுரு டெ‌ட்டனேட்டர்கள் கிடங்கிலிருந்து 17,000 த்திற்கும் அதிகமான டெ‌ட்டனேட்டர்கள் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, எலாய்ச்சிப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து 4,630 டெ‌ட்டனேட்டர்கள் திருடப்பட்டதாக புகார் பதிவாகியுள்ளது.

இந்த டெ‌ட்டனேட்டர்களையும் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்