இ‌ன்று ‌‌நிறைவடை‌கிறது தி.மு.க. மகளிர் மாநாடு: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (14:43 IST)
தி.மு.க. மக‌ளி‌ர் அ‌ணி‌யி‌ன் மா‌நில மாநாடு இ‌ன்றுட‌ன் முடிவடை‌கிறது. இ‌ன்று இரவு மு‌க்‌கிய ‌தீ‌ர்மா‌ன‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌கிறது.

தி.மு.க. மகளிர் அணியின் மாநில முதல் மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாக நடைபெற்றது. மாலையில் நடந்த பிரமாண்ட மகளிர் பேரணியை தனி மேடையில் அமர்ந்து முதலமைச்சர் கருணாநிதி பார்வையிட்டார்.

இரவு 9.30 மணிக்கு மகளிர் பேரணி முடிவடைந்ததும் மாநாட்டு மேடையில் எஸ்.பி.சற்குண பாண்டியன், வசந்தி கணேசன் ஆகியோர் பேசின‌ர். இரவு 11 மணிக்கு நிறைவு பெற்றது.

இன்று காலை 9 மணிக்கு 2-ம் நாள் மாநாடு தொடங்கியது. இது சமுதாய சீர்திருத்த மாநாடாக நடைபெற்றது. முதலில் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புற மெல்லிசை நிகழ்ச்சி நடை பெற்றது.

முலமைச்சர் கருணாநிதி காலை 10 மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்ததும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாநாட்டிற்கு டாக்டர் காஞ்சனா கமலநாதன் தலைமை தாங்கினார்.

மாநாட்டு மேடையில் கருணாநிதியுடன் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமை‌ச்ச‌ர் சுப்பு லட்சுமி ஜெகதீசன், மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் க‌னிமொ‌‌ழி, மாநாட்டு தலைவர் சற்குண பாண்டியன், வசந்தா ஸ்டான்லி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

பார்வையாளர்கள் வரிசையில் முத‌ல்வ‌ர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து இருந்தனர். புதுக்கோட்டை விஜயா மாநாட்டு தொடக்க உரையாற்றினார்.

மாலையில் மகளிர் இடஒதுக்கீடு உள்பட பல முக்கிய தீர்மானங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் பேசுகிறார். 8 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். இத்துடன் மாநாடு நிறைவு பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்