பெண்களுக்கு 33 ‌விழு‌க்காடு பெற்றுத் தரும் மாநாடாக மகளிர் மாநாடு அமையும்: கனிமொழி!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (11:06 IST)
ச‌ட்டம‌ன்ற‌‌த்‌‌திலு‌ம், நாடாளும‌ன்ற‌த்‌திலு‌‌ம் பெண்களுக்கு 33 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத்தரும் மாநாடாக ‌தி.மு.க. மக‌ளி‌ர் மாநாடு அமையும் என்று மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி கூறினார்.

கடலூரில் தி.மு.க. மகளிரணி முதல் மாநில மாநாட்டு கொடியேற்று விழா முடிந்ததும் கவிஞர் கனிமொழி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், மகளிர் அணி சார்பில் மாநாடு நடத்த வேண்டும் என்று சில வருடங்களாகவே தலைவரிடம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தான் மாநாடு நடத்துவதற்கு அனுமதி தந்திருக்கிறார். மற்றபடி இப்போது மாநாடு நடத்துவதற்கு என்று முக்கிய காரணம் எதுவும் இல்லை.

பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 ‌‌விழு‌க்காடு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடாக இது இருக்கும். இதனை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாடு அந்த இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும், மகிழ்ச்சியும் இந்த மாநாடு ஏற்படுத்தும் என்பது உறுதி.

மற்ற கட்சிகளுக்கு தான் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு மாயை. தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெண்கள் ஆதரவு எங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத்தந்ததும், பெண்கள் மேம்பாட்டுக்கு பாடுபடுவது போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவது தி.மு.க. தான். தி.மு.க.வை மேலும் அதிகமான பெண்களிடம் எடுத்துச் செல்வதற்கும், பெண்கள் தி.மு.க.வில் அதிகமாக இணைவதற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவும் எ‌ன்று க‌னிமொ‌ழி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்