ப‌ங்கு வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் இ‌ல்லை எ‌ன்று ‌நிரூ‌‌பி‌க்க‌த் தயாரா?: ஜெயல‌லிதா சவா‌ல்!

வியாழன், 5 ஜூன் 2008 (19:06 IST)
இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் ஈடுபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?‌; இ‌ந்த‌ககே‌ள்‌வி‌க்கு ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் 24 ம‌ணி நேர‌த்‌தி‌லப‌தில‌ளி‌க்க‌ததயாரா? எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா சவா‌ல் ‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இததொ‌ட‌ர்பாஅவ‌ரவெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி நான் புகார் கூறியிருந்தேன். நான் கூறியவற்றுக்கு நிதி இலாகா விளக்கமாக பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக புகார்களை கூறியிருக்கிறது. நான் கூறிய புகார்கள் ஆதாரமற்றவை என்றும் எனக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறது.

வெளிநாட்டவர்கள் யார்? யார்? என்ற முழு விவரம் இன்னும் தெரியாத நிலையிலேயே நமது நாடு உள்ளது. அவர்களது பெயர்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளது. கணக்கில் காட்டாத பணம் வெளிநாடு சென்று மீண்டும் மொரீஷியஸ் நாடு வழியாக இங்கே வருகிறது.

`பி-நெட்' முறைப்படி இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெயர்களை மத்திய நிதி இலாகா வெளியிடத் தயாரா? இந்த முதலீடுகள் ஒழுங்குபடுத்தும் `எஸ்.இ.ி.ஐ.' அமைப்பின் இணைய தளத்தில் வெளியிட தயாரா? இதை செய்ய தயங்குவது ஏன்?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு கம்பெனியை வாங்க அனுமதிக்கப்படும்போது அதன் மூலம் பயனடைகிறவர், அதன் உரிமையாளர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை நிதி இலாகா அறிந்து கொள்கிறதா? பின்லேடன், தாவூத் இப்ராகிம் போன்றவர்களு‌க்கஇ‌தி‌லதொட‌ர்‌பி‌ல்லஎன்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் ஈடுபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? பங்கு சந்தையில் தீவிரவாதிகள் பங்கு பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று நிதி இலாகா கூறுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 23-ஆ‌ம் தேதியும், 24-ஆ‌மதேதியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.18,600 கோடிக்கு பங்குகளை விற்றார்கள். இந்திய பங்கு சந்தையில் இது பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

பங்குகளை விற்ற அந்த முதலீட்டாளர்கள் யார்? என்பதை நிதி இலாகா வெளியிட வேண்டும். இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்திய முதலீட்டாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை சென்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவிக்கும் நிதியமை‌ச்‌ச‌ர் சிதம்பரம் எனது இந்த கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கட்டும். இல்லாவிட்டால் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யட்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்