இரட்டை விலைக் கொள்கை - விஜயகாந்த் வலியுறுத்தல்!

வியாழன், 5 ஜூன் 2008 (17:16 IST)
ஏழை, நடுத்தர மக்களின் நிலையை‌கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் போது இரட்டை விலைக் கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்!

இதுகு‌றி‌த்ததே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

இந்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை சற்றும் எதிர்பாராத அளவிற்கு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை செலவு சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றில் விலைகளை உயர்த்தியுள்ளது, வெந்புண்ணில் வேல் பாய்ச்சியது போலாகும்.

உலகசசந்தையில் கச்சா எண்ணெ‌ய் விலை உயர்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று இந்திய அரசு விளக்கம் தருகிறது. ஆனால் உண்மையில் வரியின் அளவு பெட்ரோல் விலையை பொருத்து அமைவதால், பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதெல்லாம், இந்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

உதாரணத்திற்கு பெட்ரோல் விலை ரூ.100 என்றால் அதில் அரசுக்கு செலுத்தும் வரி ரூ.52 ஆகும். இந்த கூடுதல் வருமானத்தை இந்திய அரசு விட்டுக்கொடுத்து, வரியை ஒரே நிலையில் வைத்திருந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

பணக்காரர்கள், அளவுக்கு அதிகமான சொத்து வைத்திருப்பார்கள் இத்தகைய விலை உயர்வுகளை தாங்க முடியும். ஏழை, நடுத்தர மக்களால் தாங்க முடியுமா? இந்த நிலையை கருதி, பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் போது இரட்டை விலைககொள்கையை இந்திய அரசு கடை பிடிக்க வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்களின் அத்தியாவசியமான பயணங்களுக்கு குறைந்த விலையிலும், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும் அரசு பெட்ரோலிய பொருட்களின் விலைகளை நிர்ணயித்தால் ஓரளவுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கை சுமை குறையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசின் விலை உயர்வு முடிவை எடுக்க துணை போகின்றன. வெளியில் இருந்து மத்திய அரசுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக மக்களிடையே இதே கட்சிகள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றன. சில கட்சிகள் தங்களை அரசியலில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய ஊமைகளாக உள்ளனர்.

பாதிக்கப்படுவதோ மக்கள். பரிகாரம் தேட வேண்டிய அரசியல் கட்சிகள் ஆட்சியில் சேர்ந்து பாதகமான முடிவு எடுப்பதும் வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், மக்களை ஏமாற்ற நடத்தும் கபட நாடகமா? என்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்